தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே பசுவந்தனையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
கனிமொழி அவர்கள் பேசியது:
இங்கு இருக்கக்கூடிய சகோதரிகளுக்காக மாதம் ஆயிரம் ரூபாய் கலைஞர் உரிமைத்தொகை வழங்கப்பட்டிருக்கிறது விடுபட்டவர்களுக்கு தேர்தல் முடிந்தவுடன் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு அவர்களுக்கும் வழங்கப்படும் அரசு பேருந்துகளில் மகளிர் விடியல் பயணம் மூலம் மகளிர்க்கு மாதம் ரூபாய் சேமிக்கப்பட்டு வருகிறது நமது முதலமைச்சரால் நமது மாணவிகள் கல்லூரியில் கல்வி கற்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது அதேபோல் தற்போது மாணவர்களுக்கும் புதுமை புதல்வன் திட்ட மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு எந்த தடைகளும் இன்றி கல்வி கற்க நம்முடைய முதலமைச்சர் திட்டத்தை செயல்படுத்தி இருக்கிறார் மழை வெள்ளத்தின்போது எட்டி பார்க்காத மோடி ஒரு ரூபாய் கூட நிவாரணம் தரவில்லை நிவாரணம் தந்தது நமது முதலமைச்சர் தான் நாம் கொடுக்கும் ஒரு ரூபாய் வரியில் நமக்கு திருப்பி கொடுப்பது 25 26 பைசா தான் கொடுக்கிறார்கள் இப்படிப்பட்ட மோசமான அரசாக ஒன்றிய அரசு இருக்கிறது.
பிஜேபி பெரும்பாலான இந்துக்களுக்கு நாங்கள் தான் பாதுகாப்பாக இருக்கின்றோம் என சொல்கின்றார்கள் என்ன பாதுகாத்தார்கள் வேலை வாய்ப்பு கொடுத்தார்களா? படிக்க வாய்ப்பு கொடுத்தார்களா என கேள்வி எழுப்பினார் நீட் தேர்வை கொண்டு வந்து நமது பிள்ளைகள் மருத்துவ கல்லூரிக்கு போக முடியாமல் ஒரு நிலைமையை கொண்டு வந்தது பிஜேபி மாணவர்கள் கல்லூரிக்கு செல்லும் போது அங்கும் ஒரு நுழைவு தேர்வை கொண்டு வந்து நமது பிள்ளைகள் படிக்கக்கூடாது என்ற எண்ணத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் கோவில்களை எல்லாம் திமுகவினர் இடித்து விடுவார்கள் என கூறுகிறார்கள் 1330 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் செய்தது நமது முதலமைச்சர் இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என கூறி மோடி ஆட்சிக்கு வந்தார் வேலை கேட்டால் பக்கோடா போடுங்கள் அதுவும் வேலைதான் என கூறுகிறார்.
எல்லா மக்களையும் அரவணைத்து போகின்ற ஆட்சியாக இந்தியா கூட்டணி ஆட்சி இருக்கும் என தெரிவித்தார் மோடி ஆட்சிக்கு வந்த பொழுது கேஸ் சிலிண்டரின் விலை 410 தற்போது 1200 ரூபாய் ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி வந்த உடன் சிலிண்டர் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும் பெட்ரோல் விலை 75 ரூபாயாகவும் டீசல் விலை 65 ரூபாயாகவும் குறைக்கப்படும் சுங்கச்சாவடிகள் அனைத்தும் மூடப்படும் விவசாய கடன் கல்வி கடன் ரத்து செய்யப்படும் எனவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மீண்டும் நான் தூத்துக்குடியில் பணிபுரிய வெற்றி வாய்ப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து எப்போதும் வென்றான் கிராமத்தில் வாக்குகள் சேகரித்தார். இந்த தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளீர்கள்
விரைவில் பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர்
யூனியன் துணைத் தலைவர் காசி விஸ்வநாதன் அவர்கள் யூனியன் சேர்மன்
ரமேஷ் அவர்கள் எப்போதும் வென்றான் முத்துகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்
-முனியசாமி.