கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை என்றதுமே அனைவருக்கும் நினைவில் வருவது மாசாணி அம்மன் கோவில், டாப்ஸ்லிப், ஆழியாறு, வால்பாறை இன்னும் ஏராளமான இடங்கள் இருக்கின்றன. இவைகளை எல்லாம் தாண்டி ஆனைமலை சாலையில் பயணம் என்பது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபவமாக ஒவ்வொருவருக்கும் இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதற்குக் காரணம் சாலையின் இருபுறமும் கோபுரம் போல் ஓங்கி உயர்ந்த மரங்கள்
பறவைகளின் கூடாரமாகவும் மனிதர்களுக்கு வீடாகவும் பயணத்தை இனிமையாக்கும் இயற்கையின் சொர்க்கம் என்று சொல்லலாம் இந்த சாலையை
இந்நிலையில் சாலை விரிவாக்கம் மற்றும் விபத்துகளை காரணமாக கூறி முதல் கட்டமாக தாத்தூரிலிருந்து 27 மரங்களை வெட்டுவதற்கான பணி துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதை அறிந்த இயற்கையோடு இணைந்து வாழும் மக்களுக்கு தலையில் இடி விழுந்தது போன்று
உணர்வு ஏற்பட்டுள்ளது என்பது நிதர்சனமான உண்மை இதை யாரும் மறுக்க முடியாது.
அந்த வகையில் அந்த பணியை தடுத்த நிறுத்தகோரியும் ஆனைமலை பகுதிக்கு
பெருமையாக விளங்குகின்ற மரங்களை காக்க ஆனைமலை ஆலம் விழுது குழுவின் சார்பாக கவனஈர்ப்பு போராட்டம் 22.04.2024 திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு தாத்தூர் பிரிவு பகுதியில் நடைபெற உள்ளது.
இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்கள், தன்னார்வலர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இயற்கையோடு இணைந்து வாழும் அனைவரையும் அன்போடு அழைக்கிறது ஆனைமலை ஆலம் விழுது.
மேலும் விபரங்களுக்கு பொ.செந்தில்குமார் MCA.,
ஒருங்கிணைப்பாளர் ஆலம்விழுது
_9942067267,
அ.பவித்ரன் B.Sc.,
தலைவர் ஆலம்விழுது _8344196465.
மரத்திற்கும் மனிதனை போலவே தாயன்பு உண்டு.
தாயின் மடியில் தலை வைப்பதை போன்று, அதன் நிழலில் படுத்து கொஞ்சம் கண்ணசரலாம்.
என்ற சிந்தனையோடு
தமிழக துணைத் தலைமை நிருபர்,
பொள்ளாச்சி
-M.சுரேஷ்குமார்.