தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே குறுக்குச்சாலையில் கனிமொழி அவர்கள் பேசியது:
நடைபெற இருக்கும் இந்த தேர்தல் மிக முக்கியமான ஒரு தேர்தல் இந்த நம்முடைய உரிமைகளை மீட்க மாணவர்கள் படிக்க வேண்டும் என்றால் அதற்கு ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் வர வேண்டும். எப்படி நீட் தேர்வு கொண்டு வந்து மருத்துவ படிப்பில் சேர விடாமல் தடுத்தார்களோ, அதே போல் புதிய கல்விக் கொள்கை கொண்டு வந்து கல்லூரியில் சேரும்போது அதில் ஒரு நுழைவுத் தேர்வு வைக்கப்படும்.
மோடி அரசின் ஊழல் பற்றிய குறைகளை பத்திரிகை நிருபர் எழுத முடியாது அப்படியே நேர்மையாக இருந்தால் ஒன்னு வேலையை விட்டு விட்டு போக வேண்டும் இந்த நிலையில் பத்திரிகை சுகந்திரம் உள்ளது.
நம்முடைய முதலமைச்சர், பெண் பிள்ளைகள் கல்லூரியில் படிக்கப் போகும்போது புதுமைப்பெண் திட்டம். அதே போல் இளைஞர்கள் கல்லூரியில் படிக்க வேண்டும் என அவர்களுக்கும் தமிழ் புதல்வன் திட்டத்தின் வழியாக 1௦௦௦ ரூபாய் வழங்கப்படும். இந்த நாட்டில் இட ஒதுக்கீடு இருக்கிறது. விவசாயிகள் உரிமைகள், பெண்கள் உரிமைகள் அனைத்தும் பாதுகாக்க வேண்டும் என்றால் வரக்கூடிய தேர்தலில் நாம் பாஜகவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும், இந்தியா கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும்.
உலகிலேயே மிகப்பெரிய கார் உற்பத்தி தொழிற்சாலையான வின்பாஸ்ட் ஆலையை தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடி முதலீட்டில் அமைக்கப்பட உள்ளது, அதில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு தான் வேலையில் முன்னுரிமை என்ற வாக்குறுதியும் நம் முதலமைச்சர் அளித்துள்ளார்.
தூத்துக்குடியில் டைட்டில் பார்க் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது, மேலும் கோவில்பட்டி விளாத்திகுளம் ஆகிய பகுதிகளிலும் டைட்டில் பார்க் அமைக்கப்பட உள்ளது.
கலைஞர் உரிமை தொகை ஒரு கோடி 15 லட்சம் பேருக்கு வழங்கப்படுகிறது. தேர்தலுக்குப் பிறகு விடுபட்டவர்களுக்கு முகாம் அமைத்து வழங்கப்படும்.
குறுக்குச்சாலை பகுதியில் புதிய பாலம் கட்டி தரப்படும். நாடாளுமன்ற சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.30 லட்சத்தில் சமுதாய நலக்கூடம். பறை பயிற்சி அளிக்கப்பட்டு நெய்தல் திருவிழாவில் பங்கேற்றனர்.33 கிராமங்கள் பயன்பெறும் வகையில் 500 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம். விரைவாக நடைபெற்று வருகிறது. விரிவாக முடிக்கப்பட்டு அத்தனை கிராமங்களும் பயன்பெறும் வகையில் அந்த திட்டமும் உங்களுக்கு சமர்ப்பிக்கப்படும் என்பதை மகிழ்வோடு தெரிவித்துகொள்கிறேன். இவ்வாறு கனிமொழி பேசினார்.
இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகள் அனைத்தும் ஒட்டப்பிடாரம் ஒன்றிய துணைத் பெருந்தலைவர் காசி விஸ்வநாதன் அவர்கள் செய்து இருந்தார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.