வாகனங்களுக்கு ஏற்ற மாதிரி மாறும் விதிமுறை பாரபட்சம் காட்டும் கேரளா MVD காவல்துறை வீடியோ பதிவுடன் உரிமைக்காக போராடும் தமிழர்கள்!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை தமிழக கேரளா எல்லைப் பகுதியான கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கொல்லங்கோடு கோவிந்தாபுரம் அடுத்த புதூர் பகுதியில் கேரளா MVD காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

அப்பொழுது தமிழகத்தில் இருந்து TN 41 BF 1709 பதிவு எண் கொண்ட வாகனத்தில் சொந்த வேலையின் காரணமாக நண்பர்கள் சிலர் சென்று கொண்டிருந்த பொழுது வாகனத்தை மறித்து காவல்துறையினர் வண்டி ஆல்ட்ரேஷன், நம்பர் பிளேட், டயர் உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி முதலில் ரூபாய் 20 ஆயிரத்துக்கும் கூடுதலாக அபராதம் விதிப்பதாக கூறியுள்ளனர் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் காவல்துறையின் செயல்பாடுகளை வீடியோ பதிவு மேற்கொண்ட பொழுது அபராத தொகையை குறைத்து ரூபாய் 8250 ரூபாய்
அபராதமாக விதித்துள்ளனர்.

இந்த வாகன தணிக்கையின் போது KL 08 CA 2000 பதிவு எண் கொண்ட வாகனம் கேரளா வாகன விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு வந்த வாகனத்தை நமது மாநில வாகனம் என்ற நிலைப்பாட்டில்
கேரளா MVD காவல்துறையினர் கண்டுகொள்ளவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இச்செயலைக் கண்டு அப்பகுதியில் வசிக்கின்ற மக்கள் மிகுந்த வேதனை அளிப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்டவர்களின் வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது வீடியோ பதிவை பார்த்தவர்கள் பாரபட்சம் காட்டும் கேரளா MVD காவல்துறையின் செயல்பாடு கண்டனத்துக்குரியது என கண்டனத்தை பதிவு செய்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கேரளா அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக துணை தலைமை நிருபர்,
-பொள்ளாச்சி M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts