மக்களவைத் தேர்தல் – 2024 இன்னும் 20 நாட்களில் நடைபெற உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தற்போது வரை பணமாகவோ, பொருளாகவோ என எதுவும் தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் மற்றும் போலீசாரால் கைப்பற்றப்படவில்லை என்பதால் சோதனைகளை தீவிர படுத்த வேண்டும் என்று பறக்கும் படையினர், சோதனைச்சாவடியில் பணிபுரியும் போலீசாருக்கு உயர் அதிகாரிகளால் உத்தரவிடப்பட்டுள்ளது. இதையொட்டி இன்று விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் இராமகிருஷ்ணன் மற்றும் தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன் தலைமையில் அனைத்து பறக்கும் படை அலுவலர்கள், சோதனைச் சாவடி கண்காணிப்பு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வாகனச் சோகையின்படி கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் பற்றியும், வாகன சோதனை போது கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் பரிசுப்பொருட்களை எவ்வாறு ஒப்படைப்பு செய்வது உள்ளிட்ட வழிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டன. மேலும் தேர்தல் நெருங்குவதால் அனைத்து பகுதிகளிலும் தீவிரமாக சோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டனர். இதில் தேர்தல் உதவியாளர் பாலமுருகன், ராஜ்குமார், மதிப்பிரகாஷ், பால்ராஜ், ஆனந்தராஜ், முத்துராமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக விளாத்திகுளம் நிருபர்
-பூங்கோதை.