தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எட்டையபுரம் அருகே பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போது, தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பவரின் மகன் வினோத்குமார்(37) என்பவர் ஓட்டி வந்த TN59 BJ 9325 என்ற வாகனப் பதிவெண் கொண்ட Fiat Punto வாகனத்தை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்ததில் அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தி விடுதிகள் அமலில் இருக்கும் போது உரிய ஆவணங்கள் இன்றி வினோத் குமார் கொண்டு சென்ற ரூ.2.50 லட்சம் பணத்தை மாநில அரசு தணிக்கைத் துறை உதவி ஆய்வாளர் கார்த்திக் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் பறிமுதல் செய்து விளாத்திகுளம் அரசு சார் நிலை கருவூலத்தில் பத்திரமாக ஒப்படைத்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பூங்கோதை, விளாத்திகுளம்.