தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள வீரன் சுந்தரலிங்கனார் 254-வது பிறந்த நாள் விழா வீரன் சுந்தரலிங்கனார் மணிமண்டபத்தில் வைத்து நடந்தது. விழாவை முன்னிட்டு வீரன் சுந்தரலிங்கனார் திருவுருவ சிலைக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து கிராம பொதுமக்கள் சார்பில் பொங்கல் வைத்து வழிபட்டனர். வீரன் சுந்தரலிங்கனார் நேரடி வாரிசு பொன்ராஜ் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு வீரன் சுந்தரலிங்கனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தி.மு.க கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கனார் 254.வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தி.மு.க சார்பில் கனிமொழி எம்.பி தலைமையில் தமிழக மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா, ஊர்வசி அமிர்தராஜ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ராமஜெயம், ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் இளையராஜா உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
வீரன் சுந்தரலிங்கனார் பேரவை கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கனார் 254.வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு வீரன் சுந்தரலிங்கனார் பேரவை நிறுவன தலைவர் எல்.கே.முருகன், பேரவை செயலாளர் தெய்வேந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது மாநில இளைஞரணி செயலாளர் ஏ.கே.எஸ்.கண்ணன் உட்பட வீரன் சுந்தரலிங்கனார் பேரவை நிர்வாகிகள் கோயில்ராஜ், விக்கி, செல்வம், அனீஸ், கார்த்திக், அரவிந்த் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பா.ஜ.க கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கனார் 254-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு பா.ஜ.க சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செந்தில் பிரபு வீரன் தலைமையில் வீரன் சுந்தரலிங்கனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது ஊடகப்பிரிவு மாநில செயலாளர் செல்வின் சவான், அமைப்புசாரா மக்கள் சேவை பிரிவு மாநில செயலாளர் கோமதிராஜ், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய பொதுச்செயலாளர் முத்தமிழ்செல்வன், ஒன்றிய பொருளாளர் கதிரவன், ஒன்றிய தொழில் துறை பிரிவு தலைவர் வேல்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். தே.மு.தி.க. கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கனார் 254-வது பிறந்தநாளை நாளை முன்னிட்டு தே.மு.தி.க சார்பில் மாவட்ட செயலாளர் தயாலிங்கம் வீரன் சுந்தரலிங்கனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அப்போது மாவட்ட அவைத் தலைவர் அலெக்சாண்டர், ஓட்டப்பிடராம் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய அமைச்சலைவர் முத்துக்குமார், ஓட்டப்பிடாரம் நகர செயலாளர் ராமேஷ், ஒன்றிய துணை செயலாளர் முத்துவேல், மாவட்ட பிரதிநிதிகள் அகமது முஸ்தபா, சுரேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாம் தமிழர் கட்சி கவர்னகிரியில் வீரன் சுந்தரலிங்கனார் 254-வது பிறந்தநாளை நாளை முன்னிட்டு நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் வேல்ராஜ் வீரன் சுந்தரலிங்கனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது ஓட்டப்பிடாரம் தொகுதி செயலாளர் தாமஸ், தொகுதி தலைவர் வைகுண்ட மாரி, ஒன்றிய தலைவர் சுடலைமணி, ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன் உட்பட கலந்து கொண்டனர்.
தமிழக வெற்றி கழகம் கவர்னகிரி வீரன் சுந்தரலிங்கனார் 254.வது பிறந்தநாள் முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் அஜிதாஆக்னல் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது நிர்வாகிகள் டிரிப்போலின், அருணாராணி, அந்தோணியம்மாள், ஜெகதீசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தூத்துக்குடி மாவட்டம் தலைமை நிருபர்,
-முனியசாமி.