தென் கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலைக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் 3 மாதங்கள் மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் நாளை சித்ரா பௌர்ணமி என்பதால் அதிகமான பக்தர்கள் வரக்கூடும் என்பதால் பக்தர்களை கண்காணிக்கவும், கடும் வெயில் நிலவுவதால் காட்டு தீ ஏற்படுவதை முன்கூட்டியே கண்காணிக்கவும் வனத்துறை சார்பில் வாங்கப்பட்டுள்ள ட்ரோன்களை கொண்டு கண்காணிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ட்ரோனில் அதிகபட்சமாக 10 கிலோ எடை கொண்ட பொருள்கள் வரை எடுத்துச் செல்லலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவசர மருத்துவ தேவைக்கான பொருள்கள் கொண்டு செல்ல இவை பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.