கோவை மாவட்டம் வால்பாறை தமிழக வணிகர் சம்மேளனம் செயற்குழு கூட்டம் அதன் அலுவலகத்தில் தொகுதி செயலாளர் சரவணன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை செயல்படாமல் மருத்துவமனைக்கு வரும் சாமானிய மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் எங்கள் நோய்க்கு யார் மருந்து தருவார்கள் யார் எங்களை குணப்படுத்துவார்கள் என்று புலம்புகின்றனர். மருத்துவமனை அருகில் அரசு மேல்நிலைப்பள்ளி, பேருந்து நிலையம் உள்ளது. கடந்த காலங்களில் தமிழகத்தில் அதிக கருவுற்ற தாய்மார்கள் பிரசவ பார்க்கப்பட்ட மருத்துவமனை இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய மருத்துவமனையில் சரியான முறையில் மருத்துவர் இருப்பதில்லை இம் மருத்துவமனைக்கு அடுத்ததாக சோலையார் டேம், முடிஸ் ஆகிய பகுதிகளும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது இவை அனைத்திற்கும் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தலைமை ஆகும். ஆனால் இங்கு தலைமை மருத்துவர் இல்லை, அதே சமயம் மருத்துவரும் இல்லை பெயரளவுக்கு மட்டுமே செயல்படுகிறது பல கோடி ரூபாய்க்கு கட்டிடங்கள் கட்டப்பட்டு எந்த பயனும் இல்லாமல் இருக்கிறது.
தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை இன்று இந்த நிலைமைக்கு இருப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது எனவே இதை உடனடியாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று இப்பகுதியில் இருக்கும் மக்களின் எளிய முறையில் சிகிச்சை பெறுவதற்கு வசதி செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இக்கூட்டத்திற்கு தமிழக வணிகர் சம்மேளனம் தலைவர் ரவீந்திரன், செயலாளர் கே டி என் மணிகண்டன், பொருளாளர் அழகு என்கிற சிவாவும் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சித் தலைவருக்கு கோரிக்கை மனு ஒன்று வைக்கப்பட்டுள்ளது என்று வால்பாறை தொகுதி செயலாளர் சரவணன் குறிப்பிட்டுள்ளார்.
உண்மையிலே நாமும் இச் செய்தி அறிந்து மருத்துவமனையை ஆய்வு செய்தோம் வால்பாறை அரசு பேருந்து நிலையம் அருகிலும் இருப்பதால் மருத்துவமனைக்கு வயதான முதியோர்கள் கற்பிணி பெண்கள் அனைவரும் வருவார்கள் பெயரளவுக்கு மட்டுமே மருத்துவமனை உள்ளது உரிய சிகிச்சை அளிப்பதில்லை என்பது வேதனையாக உள்ளது ஆட்சியாளர்களின் கவனக்குறைவால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பது 100% உண்மை என்பது தெரிகிறது.
தமிழகம் முழுவதும் மருத்துவத்துறை சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் பொழுது கோவை மாவட்ட வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சேவை முற்றிலும் கேள்விக்குறியாக உள்ளது தற்பொழுது இயற்கை நிறைந்த வால்பாறையில் மருத்துவம் சேவை செய்ய பல மருத்துவர்கள் சமூக சேவை செய்ய இருக்கிறார்கள் ஆனால் மருத்துவ கவுன்சிலிங் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இடம் பெறவில்லை என்பது நமக்கு கிடைத்த தகவலாக உள்ளது இனியாவது மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் இருக்கும் சாமானிய மக்களையும் பொதுமக்களையும் பாதுகாப்பாரா என்பது பொறுத்திருந்து பார்ப்போம்.
-P.பரமசிவம், வால்பாறை.