கொடைக்கானல் மற்றும் நீலகிரி மாவட்டம் செல்வற்கு சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான பிரத்யேக இணையதளத்தை நீலகிரி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நீலகிரி மற்றும் கொடைக்கானலில் ஏற்பட்டுள்ள பார்க்கிங், தங்கும் விடுதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இரு இடங்களுக்கும் செல்ல இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, இரு இடங்களுக்கும் பேருந்தில் செல்ல இ-பாஸ் தேவை இல்லை என்றும், வாகனங்களுக்கு மட்டுமே இ-பாஸ் தேவை என்றும் தமிழக அரசு அறிவித்தது.
இதனிடையே, இ-பாஸ் பெற தனியாக இணையதள பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. http://epass.tnega.org என்ற இந்த இணையதள பக்கத்தில் பொதுமக்கள் தங்கள் விவரங்களை உள்ளீடு செய்து விண்ணப்பித்து இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மே 7ம் தேதி முதல் நீலகிரி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், மே 6ம் தேதி காலை 6 மணி முதல் இ-பாஸ் பெற விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.