எட்டயபுரத்தில் வைகாசி மாத கோவில் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட அளவிலான மின்னொளி கபடி போட்டி – வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசும் ரொக்கத் தொகையும் வழங்கி சிறப்பித்த அதிமுக நிர்வாகிகள்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் ஆர் சி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் கோவில் வைகாசி மாத கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மின்னொளி காபடி போட்டி நடைபெற்றது.
மாவட்ட அளவில் நடைபெற்ற இப் போட்டியில் தூத்துக்குடி திருநெல்வேலி தென்காசி ராமநாதபுரம் விருதுநகர் மேல்மருவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 80 க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.
இப் போட்டியை கோவில்பட்டி அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ், எட்டயபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் ஆகியோர் கலந்துகொண்டு போட்டியை தொடங்கி வைத்து பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசு தொகையை வழங்கினார். இதில் சுற்று வட்டார பகுதியைச் மக்கள் அதிமுக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ந.பூங்கோதை, விளாத்திகுளம்.