குமரி ஸ்ரீ பாலகிருஷ்ண சுவாமி திருக்கோவில் திருவிழா மற்றும் 50_வது ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு பரிசு வழங்கும் நிகழ்ச்சி!!

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி, வேர்கிளம்பி பேரூராட்சி, சித்திரங்கோடு, ஊற்றுப்பாறவிளை அருள்மிகு ஸ்ரீ பாலகிருஷ்ண சுவாமி திருக்கோயில் திருவிழா மற்றும் 50-ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு 20-05-2024 அன்று நடைபெற்ற பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி மாவட்ட மீன் விவசாயிகள் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க (𝗞𝗞𝗙𝗙𝗣𝗢-1) மாவட்ட சேர்மனும், தமிழக பா.ஜ.க மீனவர் பிரிவு மாநில செயலாளர் & பெருங்கோட்ட பொறுப்பாளரும், அகில இந்திய மீனவர் மக்கள் வளர்ச்சி இயக்கத்தின் (𝗔𝗜𝗙𝗣𝗗𝗢) நிறுவனர் மற்றும் தலைவருமான E.S.சகாயம் அவர்கள் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்.

இந்நிகழ்வானது கோயில் கமிட்டி பொருளாளர் T.வினு தலைமையிலும், J.பிரகலாதன், V.சரவணகுமார், V.S. ஆகாஷ் ஆகியோர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.

மேலும் நிகழ்வில் J.பிரியதர்ஷினி வரவேற்புரை ஆற்றினார், P.பிரவீணா நன்றியுரை வழங்கினார்.

மேலும் இந்நிகழ்வில் வேர்கிளம்பி பா.ஜ.க பேரூராட்சி தலைவர் ஜெனிஷ் அவர்கள் கலந்து கொண்டார்.

செய்தியாளர்,
– P.இந்திரன், கன்னியாகுமாரி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

Follow by Email
Instagram
Telegram
WhatsApp