கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சத்தை போக்க விழிப்புணர்வு – மழைக்காலங்களில் மக்கள் கடை பிடிக்க வேண்டிய அவசியம் குறித்து குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் பேட்டி. கோவையில் கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சத்தை போக்கும் விதமாக மழைக்காலங்களில் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் குறித்த காட்சிகளை கொண்டு குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். தமிழகத்தில் காலநிலைக்கு ஏற்ப வெப்பம்,குளிர்ச்சி, மழை என்பது மாறி மாறி வருகிறது.ஆனால் கடந்த கடந்த ஆண்டுகளை விட எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கோடை காலத்தில் கடும் வறட்சி மற்றும் வெப்பம் அதிகரித்தது. இதனால் பல்வேறு இடங்களில் குடிநீர் பஞ்சமும் நிலவியது.
இதனிடையே நம்ம ஊருக்கு தேவையான தண்ணீரை நாமே உற்பத்தி செய்யும் வகையில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் பல்வேறு இடங்களில் குளம் குட்டைகளை தூர்வாரி வருகின்றனர்.
இதனிடைய கடந்த வாரம் கோவை வெள்ளலூர் பகுதியில் உள்ள சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் உள்ள குட்டையை ப்ரூக்ஃபீல்ட்ஸ் பங்களிப்புடன் தூர்வாரியதில் இரண்டு நாட்கள் பெய்த மழையில் வறண்டு கிடந்த குளம் நிரம்பி காட்சியளித்துள்ளது.இதே போல் மழைக்காலங்களில் அனைத்து வீடுகளிலும் மழை நீர் சேமிப்பு தொட்டிகளை அமைத்து சேகரித்தால் கோடை காலங்களில் வரும் வரச்சிகளை தடுக்க முடியும் என குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்தனர்.அதே போல் தூர் வாருவதற்கு முன்பும் தூர்வாரிய பின்பு மழைநீர் தேங்கிய கங்கவர்ந்த காட்சிகளை அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெளியிட்டுள்ளனர்.
-சீனி போத்தனூர்.