கோவை: கோவையில் கல்லூரி மாணவியின் உள்ளாடைகளை அடிக்கடி திருடி வெட்டி எறிந்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
கோவை ஆர் .எஸ் .புரம் அருகே உள்ள, எஸ்.என்.பாளையத்தை சேர்ந்தவர் ராமன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் முருகன் (வயது 54)).
முருகன் கட்டிட வேலைக்குச் சென்று வருகிறார். இவரது மனைவி இறந்துவிட்டார்.
முருகன் வீட்டருகில் வசிப்பவர் ராமன். இவருக்கு 24 வயதில் கல்லூரியில் படிக்கும் மகள் உள்ளார்.
இந்த நிலையில் மாணவி தண்ணீர் பிடிக்க வரும்போதும் முருகன் அவரை செல்போனில் வித்தியாசமான கோணங்களில் படம் பிடிப்பது, தொந்தரவு செய்வது என பிரச்சனை செய்துள்ளார்.
இதுகுறித்து ஆர். எஸ் .புரம் காவல் நிலையத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாணவியின் பெற்றோர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் முருகனை அழைத்து அவரது குடும்ப சூழ்நிலையை கருதி இனி இது போன்று செயலில் ஈடுபடக் கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக மீண்டும் முருகனின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. மாணவி கொடியில் காயப் போட்டு இருந்த உள்ளாடைகள் திடீர் திடீரென மாயமானது.
இது குறித்து விசாரித்த போது தான் முருகன் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இதனால் மாணவி ஆர் .எஸ் .புரம் போலீசில் செய்தார். இதுகுறித்து சப்-இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி மற்றும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். முருகனின் வீட்டில் சென்று சோதனை செய்தபோது அவர் திருடிய உள்ளாடைகளை கத்தரிக்கோலால் பல துண்டுகளாக வெட்டி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைப் பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இடைத்தொடர்ந்து போலீசார் முருகனை கைது செய்தனர். அவர் மீது அவதூறாக பேசுதல் மற்றும் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். அதன் பிறகு கோவை மகிளா நீதிமன்றத்தில் முருகன் ஆஜர் படுத்தப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.