கோடை வெயில் தணிந்து தற்பொழுது கோடை மழை துவங்கி உள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் கனமழையும் சில மாவட்டங்களில் பரவலாக மிதமான மழையும் பெய்து வருகிறது. கோவையிலும் கடந்த ஒரு வார காலமாக மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நாளொன்றுக்கு சுமார் ஒரு மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை மிதமான மழையும் ஒரு சில இடங்களில் தொடர்ந்து சாரல் மழையும் பெய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக நேற்றும் கோவை மாநகருக்கு உட்பட்ட சிங்காநல்லூர், புலியகுளம், இடையர்பாளையம், கவுண்டம்பாளையம், ஹோப்ஸ் உட்பட பல்வேறு பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரவலாக மழை பெய்தது. கோடை வெயில் காரணமாக மக்கள் அவதிக்குள்ளான நிலையில் தற்பொழுது பெய்து வரும் கோடை மழை குளிர்ச்சியை ஏற்படுத்தினாலும் ஓரிரு இடங்களில் பெய்த மழை வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக கவுண்டம்பாளையம் பகுதியில் பெய்த மழையினால் சாலைகளில் மழை நீர் தேங்கி அனைத்து வாகனங்களும் பாதி அளவுக்கு நீருக்குள் மூழ்கின. மேலும் அப்பகுதியில் சென்ற வாகனக் ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.