கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதிக்குட்பட்ட தமிழக கேரளா எல்லைப் பகுதியான செமணாம்பதி கிராமப் பகுதியில் வசித்து வரும் விஜய், ரம்யா தம்பதியர்களின் மகன்
உதயதீரன் (வயது 4) இந்த சிறுவனுக்கு மரபணு குறைபாடு காரணமாக வரக்கூடிய தசை நார் சிதைவு நோயால் (Duchenne Muscular Dystrophy – DMD) பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த குழந்தையின் உயிர் காக்க 24 முதல் 26 கோடி ரூபாய் வரை தேவைப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சிறுவனின் தாய், தந்தை சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவ்வளவு பெரிய தொகையை ஏற்பாடு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களுக்கு மனிதநேயமிக்க மாமனிதர்கள் மனது வைத்தால் குழந்தையை காப்பாற்றி விடலாம் என்பது நிதர்சனம். அதே சமயம் நிச்சயமாக நீங்கள் செய்யும் உதவி உங்கள் தலைமுறையை சூழ்ந்து காக்கும் என்பது நிதர்சனமான உண்மை.
மேலும் இது சம்பந்தமாக விளக்கம் தேவைபட்டால் குழந்தையின் பெற்றோர்களின் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது தொடர்பு கொண்டு பேசுங்கள். முடிந்தவரை இந்த செய்தியை பகிர்ந்து சிறுவனின் உயிர் காக்க உதவுங்கள் என்ற சிந்தனையோடு,
-M.சுரேஷ்குமார்.