கோவை மாநகர் சுந்தராபுரம் பகுதியில் முத்து மாரியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவிலின் 40 ஆம் ஆண்டு திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவினை அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் அறக்கட்டளையைச் சார்ந்த நிர்வாகிகள் இணைந்து சிறப்பாக நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சிறுவாணி சாரல் நண்பர்கள் குழு மற்றும் புவனா புரமோட்டர்ஸ் அண்ட் மாயா கன்ஸ்ட்ரக்சன் இணைந்து நடத்திய ஸ்ரீ ஆராதனா நாட்டியப்பள்ளி குரு.நாட்டியகலா சூடாமணி திருமதி. மீனாட்சி சாகர் அவர்களின் குழுவினர் வழங்கிய பரதநாட்டிய நிகழ்ச்சி 18-05-2024 சனிக்கிழமை மாலை(நேற்று) அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் மாலை சுமார் 6.30 மணி அளவில் தொடங்கி இரவு 10.30 மணி வரை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திரு.AR.ஞான சேகரன் (Managing Director, புவனா புரமோட்டர்ஸ் அண்ட் மாயா கன்ஸ்ட்ரக்சன்) அவர்கள் தலைமை ஏற்றார்கள்.
திரு.M.ராதாகிருஷ்ணன் ஆசிரியர் அவர்கள்( அமைப்பாளர், சிறுவாணி சாரல் நண்பர்கள் குழு) வரவேற்புரை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். சிறுவாணி சாரல் நண்பர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர்கள் திரு M.செந்தில் குமார் மற்றும் திரு.G.ரகுபதி அவர்கள் உட்பட சிறுவாணி சாரல் நண்பர்கள் குழு உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து விழாவினை சிறப்பாக நடத்தினர். இந்நிகழ்ச்சிக்கு திரு.குறிச்சி நா.பிரபாகரன் அவர்கள்( தலைவர், முன்னாள் குறிச்சி நகராட்சி) உட்பட சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கு வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகளுக்கு சிறுவாணி சாரல் நண்பர்கள் குழு சார்பாக பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சி கண்டு களித்தனர் இதில் பரதநாட்டிய கலைஞர்கள் பல்வேறு பாடல்களுக்கு பரதநாட்டியம் ஆடி விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினர்.
கோவில் திருவிழா மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் சிறுவாணி சாரல் நண்பர்கள் குழுவின் சார்பாக இரவு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியை சிறப்பாக நடத்திய சிறுவாணி சாரல் நண்பர்கள் குழுவிற்கு ஊர் பொதுமக்கள் பக்தர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்து சென்றார்கள்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.