கோவை மாவட்டம் வால்பாறை பகுதியைச் சேர்ந்த P.பரமசிவம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு எங்கள் அமைப்பின் சார்பாகவும் இப்பகுதியில் இருக்கும் ஏழை எளிய தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் சார்பாகவும் பணிவான வணக்கம்.
அரசுத்துறையை சார்ந்த உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை அச்சுறுத்தும் வண்ணமாக பொய்யான தகவல்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் இல்லாமலும் குற்றம் செய்யாமலே குற்றம் செய்தவாறு ஒரு பிம்பத்தை உண்டுபண்ணி கடிதம் ஆட்சியாளர்களுக்கு அனுப்புவதால் உண்மையான நேர்மையான சாமானிய மக்களுக்கு உதவுகின்ற அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மனதளவிலும் குடும்ப அளவிலும் பாதிக்கிறார்கள்.
ஒரு சிலரின் சுயநலனுக்காக வேலையே செய்யாமல் ஆடம்பரமாக உலாவிக் கொண்டிருந்தவர்களை தனது பணியை சாமானிய மக்களுக்கு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டாலோ, கண்டித்தாலோ இவ்வாறு சுயநலத்தில் உள்ளவர்கள் அதிகாரிகள், அலுவலர்கள் செய்கிறார்கள். இது தமிழகத்தில் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் உண்மையான, நேர்மையான சாமானிய மக்களுக்கு உதவுகின்ற அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கைககள் கட்டப்பட்டு ஊமையாக்கி விடுகின்றனர்.
இதனால் பாதிப்பு சாமானிய மக்களுக்கு. அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி விடுகிறார்கள். இனியாவது காலம் தாழ்த்தாமல் பெயர், முகவரி, தொலைபேசி எண்கள் போன்ற எந்த ஆதாரங்களும் இல்லாமல் வரும் கடிதங்கள் மீது விசாரணையோ நடவடிக்கையோ எடுக்க வேண்டாம். இதற்கென்று ஒரு அலுவலர் பல நாட்கள் விசாரணை செய்து அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது. நல்லவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் இந்த மனுவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.