பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வில் கணபதிபாளையம் கந்தசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று 100% தேர்ச்சி!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, ஆனைமலை, கணபதி பாளையம் கந்தசாமி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி மாணவர்கள் நடைபெற்று முடிந்த பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில்
58 மாணவ / மாணவிகள் தேர்வு எழுதி சிறந்த மதிப்பெண்கள் பெற்று 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகள் M.சம்யுக்தா 586 மதிப்பெண்கள் கணிதப்பாடத்தில் 100க்கு 100 மதிப்பென் பெற்று முதல் இடத்திலும் M.பரணி 585 மதிப்பெண்கள்
வணிகவியல், பொருளியல், கணக்குப் பதிவியல் மற்றும் கணினி பயன்பாடு பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்களைப் பெற்று இரண்டாவது இடத்திலும், M.திவ்யா 584 மதிப்பெண்கள்
வணிதவியல் மற்றும் கணினி பயன்பாடு பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்களைப் பெற்று மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

மேலும் பள்ளியில் 36 மாணவர்கள் 500 மதிப்பெண்களும், மேலும் 49 மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு மேலும் பெற்றுள்ளனர். பள்ளியின் சார்பாக முதல் முன்று
இடங்களைப் பிடித்த மாணவர்களை பள்ளி முதல்வர் திரு சண்முகம், செயலர் திருமதி உமாமகேல்வரி k, ஒருங்கிணைப்பாளர் திரு. ரவிச்சந்திரன் ஆகியோர் மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டினர்.

மேலும் அணைத்து மாணவர்களையும் இருபால் ஆசிரியர்களும் பெற்றோர்களும் பாராட்டினர். இது குறித்து பள்ளியின் முதல்வர் திரு. சண்முகம் கூறுகையில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களை பள்ளியின் சார்பாக அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். அதேசமயம் வெற்றி பெற்ற மாணவர்கள் உயர் கல்வியில் தாங்கள் விரும்பும் துறையில் சாதனை படைக்க வேண்டும். அனைவரும் தலைசிறந்த பொறுப்புகளில் அமர்ந்து மிளிர வேண்டும் இது என்னுடைய ஆசை மட்டுமல்ல உங்களுடைய லட்சியமாக இருக்கட்டும் வெற்றி நிச்சயம்.

தமிழக துணை தலைமை நிருபர்,
-M.சுரேஷ்குமார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp