கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை அடுத்துள்ள நடுமலை பகுதியில் புதிதாக உருவாகி வரும் குப்பைமேனி கிடங்கால் துர்நாற்றம் வீசும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. வால்பாறை வட்டார பகுதியில் உள்ள குப்பைமேனி கிடங்கிற்க்கு பதிலாக நடுமலை செல்லும் பாலத்தின் அருகே உள்ள வளைவில் குப்பைகள் அதிக அளவு கொட்டி கிடக்கின்றன.
இதனைக் கண்டு அப்பகுதியில் உள்ள வாகன ஓட்டுனர்கள் பொதுமக்கள் கடந்து செல்கையில் துர்நாற்றம் வீசும் அவல நிலை உருவாகியுள்ளது. இதனை கண்டு வால்பாறை நகராட்சி ஆய்வாளரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி எஸ்டேட் நிர்வாகிகள் கூறுகின்றனர். இதனைக் கண்டு அப்பகுதியில் குப்பைகளை கொட்டுவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்பகுதியில் வால்பாறை நகராட்சி ஆணையர் தலைமையில் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-திவ்யக்குமார், வால்பாறை.