கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களுகு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. இது கோடை மழையா? பருவமழையா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் விதமாக கடந்த இரண்டு நாட்களாக மழை தாராளமாய் பொழிந்து வருவதால் கோவை மற்றும் சுற்றுவட்டார கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனிடையே கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
அதன்படி, இன்று முதல் 4 நாட்கள், அதாவது 22ம் தேதி வரை கோவை, நீலகிரி மாவட்டங்களில் மிக கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாகவும், 21ம் தேதி வரை திருப்பூர், திண்டுக்கல், விருது நகர் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது,
தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. சாலை பணிகள், மேம்பால கட்டுமான பணிகளால் சாலைகள் மிகவும் மோசமடைந்துள்ளன. இதனிடையே இன்று காலை முதலே மாநகரின் பல்வேறு பகுதிகளில் வாகனப் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. சித்திரை மாதம் முடிந்து வைகாசி தொடங்கியதும் வரும் முதல் சுப முகூர்த்த தினம் இன்று வந்துள்ளது. இதனால் இன்று போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது. மாலை நேரத்தில். பின்வரும் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கலாம் என NCC கணித்துள்ளது.
- உக்கடம்
- கரும்புக்கடை
- சிங்காநல்லூர்
- ஒண்டிப்புதூர்
- கிராஸ்கட் ரோடு
- பாப்பம்பட்டி பிரிவு
- சித்ரா
- சாய்பாபா காலனி
- சரவணம்பட்டி
- ஈச்சனாரி
- பீளமேடு
- ஹோப்ஸ்
ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் இன்னும் சற்று அதிகரிக்கலாம் வேலையாக செல்வோர் முன்கூட்டியே சென்றால் கால விரையத்தை தவிர்க்கலாம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.