கோவை மாவட்டம், மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவ-மாணவிகள் சார்பில் மலரும் நினைவுகள் குழு கடந்த 13 மாதங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டு இயங்கி
வருகிறது.
இந்த மலரும் நினைவுகள் குழு சார்பில் பிரம்மாண்ட விழாக்கள் நடத்தி கலெக்டர், நீதிபதி போன்ற ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை அழைத்து முன்னாள், இந்நாள் ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட வேண்டும்: மதுக்கரை அரசு பள்ளி ஏழ்மை மற்றும் சாதனை படைக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்க வேண்டும்: பேட்ஜ் பாகுபாடு கூடாது: ஒட்டுமொத்த முன்னாள் மாணவர்களும் பங்கேற்கலாம் என இலக்குடன் துவங்கி, 430 பேரை தற்போது கொண்டுள்ளது.
நடப்பாண்டு 2024 மார்ச் பொதுத்தேர்வில் மதுக்கரை அரசு பள்ளி சாதனை மாணவி பத்தாம் வகுப்பில் 488 மதிப்பெண் எடுத்த ஐஸ்வர்யாவுக்கு பாராட்டும் சீருடையும் நோட்டுகளும் 7,000 ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்க தீர்மானிக்கப்பட்டது. மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி மூத்த, முன்னாள் மாணவர் அமிர்தலிங்கம் தலைமையில் அவரது புதல்வி அருள்மொழி கரங்களால் இந்த ஊக்கப்பரிசுகள் கடந்த 18-5-2024 அன்று காலை 8.45 மணி அளவில் மதுக்கரையில் வீடு தேடிச்சென்று வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் மாணவர்கள் சீரபாளையம் கணேசன் ஆயிரம் ரூபாய், ராதா ஸ்டுடியோ
போட்டோகிராபர் ஜான் 500 ருபாய், பத்திரிக்கையாளர் ஆர்.கே.விக்கிரம பூபதி 500 ரூபாய் மற்றும் ஓய்வு கல்வி அதிகாரி-ஆசிரியர் முனைவர் தனலட்சுமி அவர்கள் ஆலோசனையில்,
கோவை சுகுணாபுரம் மேற்கு பகுதியை சேர்ந்த மாரப்பன் அவர்கள் நினைவாக சமூக சேவகர் அசோக்குமார் 5 ஆயிரம் ரூபாய் என நல்ல உள்ளங்கள் பங்களிப்பு மூலம் ஊக்கப்பரிசு
வழங்கப்பட்டது.
மேலும் மாணவி கல்விக்கு துணை நிற்பது என உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாணவி ஐஸ்வர்யா டியூசன் கட்டணத்தை ஏற்றுக்கொண்ட மதுக்கரை அரசு பள்ளி முன்னாள் மாணவர் -பேராசிரியர் – கல்வியாளர் சீரபாளையம் முருகேசன் அவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதற்கெல்லாம் உறுதுணையாக நின்ற முன்னாள் மாணவி மற்றும் மதுக்கரை அரசு பள்ளி ஆசிரியர் கீதா அவர்களுக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.
இந்த முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்த மூத்த மாணவர் அமிர்தலிங்கம், அவரது புதல்வி அருள்மொழிக்கும் முனைவர் தனலட்சுமி அம்மாவுக்கும் மனதார நன்றி தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சாதனை மாணவி ஐஸ்வர்யா நன்றி கூறி பேசுகையில், மலரும் நினைவுகள் சேவை பாராட்டத்தக்கது என்றும், வருங்காலத்தில் தான் படித்து மருத்துவர் ஆகி சமூகத்திற்கு சேவை செய்வேன் எனவும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
One Response
🌻 நல்லதொரு சேவை.
தங்களது பணி சிறக்க வாழ்த்துகள். 💐