கோவை சரவணம்பட்டி துடியலூர் ரோட்டில் ராணுவ வீரர்கள் நலச் சங்கத்தினருக்கு சொந்தமான குடியிருப்பு உள்ளது.
இங்கு 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்நிலையில், இந்த குடியிருப்பில் உள்ள ராணுவத்தில் பணியாற்றும் பிரசாந்த் ரெட்டி என்பவர் மகன் ஜியானஸ் ரெட்டி (6) மற்றும் பாலசுந்தர் மகள் வியோமா பிரியா (8) ஆகியோர் கடந்த 23ம் தேதி அதே பகுதி வளாகத்தில் உள் சிறுவர் விளையாட்டு பூங்காவில் விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது, சறுக்கில் 2 பேரும் ஏறி விளையாடிய போது தரையில் பதிக்கப்பட்டிருந்த புதைவட மின் கம்பியில் மின் ஒயர் பழுதாகி அதில் மின்சாரம் கசிந்து சறுக்கு கம்பி ஏணியில் பாய்ந்ததில் ஜியான்ஸ் ரெட்டி, வியோமா பிரியா ஆகியோர் பலியாகினர். இச்சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து, குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள், எலக்ட்ரீசியன், பூங்கா பராமரிப்பாளர் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, பூங்கா பராமரிப்புக்கான ஒப்பந்தாரர்கள் முருகன், சீனிவாசன், சிவா ஆகியோர் மீது இந்திய தண்டனை சட்டம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.