கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் அருகில் அமைந்துள்ள பிரபல சுற்றுலா தளமான ரோஸ் கார்டன் அருகில் உள்ள கடைகளில் தான் திருட்டுகள் அதிகரித்து வந்தது. திருட்டுகள் அதிகரித்ததை தொடர்ந்து கடை உரிமையாளர் கடையில் கண்காணிப்பு கேமரா பொருத்தி வைக்கப்பட்டிருந்தார். திருடன் தனது முகத்தை மறைப்பதற்காக கண்காணிப்பு கேமராவை மறைக்கும் பொழுது தான் திருடனை கண்டுபிடிக்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மூணாறு காவல் நிலையத்தில் கடை உரிமையாளர்கள் காணொளியையும் புகைப்படத்தையும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்,இது தொடர்பாக மூணாறு செய்திகளில் வெளிவந்த வீடியோக்கள் மூலம் திருடனை மூணாறு டவுனில் வைத்து நேற்று மாலை கைது செய்தனர். திருடன் பலக்கடைகளிலும் பணம் மற்றும் பொருட்களையும் திருடுவது வழக்கமாக வைத்துக் கொண்டிருந்தார் தொடர்ந்து திருட்டுகள் அதிகரித்ததை தொடர்ந்து கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்ததில் இவர் சிக்கிக்கொண்டார். சுற்றுலா பயணிகளையும் கடைகளில் கிடைக்கும் சிறிய சிறிய வருமானங்களை வைத்து இங்கு வசிக்கும் மக்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். குற்றவாளிக்கு சிறந்த சிறை தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்கள் காவல்துறையில் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-மணிகண்டன் கா
மூணாறு,கேரளா