கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு பகுதியில் அமைந்துள்ள ஹைரேஞ்சின் முதல் கத்தோலிக்க தேவாலயமான மூணாறு மவுண்ட் கார்மல் தேவாலயம் 125 ஆம் ஆண்டு கொண்டாட்டம் மற்றும் புனித தேவாலயமாகவும், பேராலயமாகவும் அறிவிக்கப்பட்டது.
மே 25ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு திருப்பலிக்கு பின்பு தான் அதிகாரப்பூர்வமாக பேராலயமாக அறிவிக்கப்பட்டது. கடந்த தினம் மதியம் நடைபெற்ற சடங்கில் தான் மூணார் மவுண்ட் கார்மல் தேவாலயம் பேராலயம் பதவிக்கு உயர்த்தப்பட்டது. கம்பீரமான முறையில் சிறப்பான நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
ஊர்வலத்திற்கு பின்பு ஆர்ச்பிஷப் தாமஸ் ஜெ நெட்டோ பசிலிகாவின் நுழைவுப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த சின்னத்தை திறந்து வைத்தார் தொடர்ந்து நடைபெற்ற திருப்பலிக்கு விஜயபுரம் மறை மாவட்ட ரெவரன் டாக்டர் செபாஸ்டின் தெக்கத்தைச் சேரில் தலைமை வகித்தார்.
திருப்பலிக்கு நடுவே விஜயபுரம் மறை மாவட்டம் துணை பிஷப் டெபர் டாக்டர் ஜஸ்டின் போப்பாண்டவரின் அறிக்கை வாசித்து பேராலய அறிவிப்பை நடத்தினார். இடுக்கி மறை மாவட்ட பிஷப் மார்ஜூன் நெல்லிகோனில் உட்பட 12 பிஷப்புகளையும் முன்னிலை நடைபெற்ற திருப்பலியில் தான் மறை மாவட்ட அறிவிப்பு நடத்தப்பட்டது.
நூற்றிற்கும் மேற்பட்ட பாதிரியார்களும், சன்யாசிகளும் ஆயிரக்கணக்கான விசுவாசிகளும் பங்கெடுத்தனர். இதற்கு முன்பு மூணாறு அனைத்து தேவாலயங்களிலும் பணியாற்றிய அனைத்து பங்கு தந்தையர்களும் பேராலயம் அறிவிப்பில் பங்கெடுத்தனர். 1988 மிஷனரி ஆக இருந்த பாதர் அல்போன்ஸ் தொடங்கிய தேவாலயம் 2024 பிப்ரவரி 27ஆம் தேதி பிரான்சிஸ் போப்பாண்டவரான பிரான்சிஸ் பேராலயமாக அறிவித்தார்.
மாவட்டத்தில் முதல் பேராலயமாகவும் கேரளத்தில் 11வது பேராலயமாகவும் நாட்டில் 31 வது பேராலயமாகவும் மூணார் மவுண்ட் கார்மல் தேவாலயம் உள்ளது. தேவாலயத்தின் சிறப்பு பாரம்பரியம் போன்றவை பரிகாரத்தை இந்த உயர்ந்த பதவி தேவாலயத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.
தேயிலை தோட்ட வேலைகளில் தொடர்பாக தமிழ்நாட்டில் இருந்து கேரளத்தில் இருந்தும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மூணாறுக்கு வந்த தொழிலாளிகளின் ஆன்மீக தேவைகளுக்காக தேவாலயம் கட்டப்பட்டது ஒரு வருடம் நீண்ட ஜூபிலி கொண்டாட்டங்களும் நிறைவு பெற்றது.
-மணிகண்டன் கா, மூணாறு.
One Response
Valthukal
By Chelladurai
Gundam alay Estate