தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பலதரப்பட்ட அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் இன்று மே-18 முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று நாம் தமிழர் கட்சியினர் சார்பில் தமிழ்நாட்டின் ஏராளமான பகுதிகளில் மே-18 நினைவு தினம் அனுசரிப்பு மற்றும் வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் மே – 18 நினைவு தினத்தை அனுசரிக்கும் பொருட்டு விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் மாபெரும் இரத்ததான முகாம் ஏற்பாடு செய்துள்ளனர். இதில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் தன்னார்வலர்கள் என ஏராளமானோர் பங்கேற்று இரத்த தானம் செய்து வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம் பகுதி நிருபர்
-பூங்கோதை.