கோவை மாவட்டம் வால்பாறையில் வணிகர் சம்மேளனம் சார்பாக வணிகர் தின விழா கோனார் மெடிக்கல் அருகில் வால்பாறை தொழிலதிபர் திரு A. சிங்காரம் கிருஷ்ணா ஜுவல்லரி அவர்களால் வெயிலின் காரணத்தால் தாகத்தில் வரும் பொது மக்களுக்காக நீர்மோர் பந்தலை துவக்கி வைத்தார்.
இதில் சங்க நிர்வாகிகள் தொகுதி செயலாளர் சரவணன், தலைவர் ரவீந்திரன், செயலாளர் மணிகண்டன், பொருளாளர் சிவா, அழகுமலை, இப்ராஹிம் செல்வம் டைலர் சுப்பிரமணியன் வெங்கட் விஷ்ணு சுரேஷ் பழனிச்சாமி செல்லத்துரை இவர்களுடன் மாநில செயற்குழு உறுப்பினர் பரமசிவம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாமானிய மக்கள் பாதிக்க கூடாது என்பதற்காக எளிய முறையில் வெயில் தாக்கத்தில் வரும் பொது மக்களுக்கு நீர் மோர் வழங்கியது. இது பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியும் வரவேற்பையும் பெற்றது.
-P.பரமசிவம், வால்பாறை.