கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டாரம் வால்பாறை உள்ள அரசு பழைய பேருந்து நிலையம் உள்ளது.
இந்த பேருந்து நிலையத்திலிருந்து பொள்ளாச்சி, வெள்ளமலை, அக்கா மலை, ஊசிமலை, கருமலை ஆகிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய அரசு பேருந்துகள் இங்கிருந்து புறப்பட்டு செல்கின்றன.
இப்பகுதியில் தெருவிளக்கு முறையான பராமரிப்பு இல்லாமல் இருட்டு அடைந்து கிடக்கிறது. பழைய பேருந்து நிலையம் பகுதியில் மின்சார விளக்கு இருந்தும் பயனில்லை. இதுபோன்ற பகுதிகளில் கண்டிப்பாக மின்சார விளக்கு வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏதேனும் அசம்பாவங்கள் ஏற்படும் முன்னே நடவடிக்கை எடுப்பார்களா என இப்பகுதி வரும் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.
-திவ்யக்குமார், வால்பாறை.