கோவை மாவட்டம் வால்பாறை அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் 37 ஆம் ஆண்டு திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதன் ஒரு பகுதியாக நேற்று காலை ஸ்ரீ ராமர் கோவில் வளாகத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ முத்துமாரியம்மன் திருத்தேர் பவனி,மாவிளக்கு மேள தாளங்கள் முழங்க வால்பாறை நகர முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்த ஸ்ரீ முத்துமாரியம்மன்
பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மேலும் நல்லகாற்று ஆற்றில் இருந்து அண்ணா நகர் பக்தர்கள் வேல் பூட்டி அழகு பறவை காவடி எடுத்து ஸ்ரீ முத்துமாரியம்மனை தரிசனம் செய்தனர். மேலும் விழா கமிட்டி விழாவினை சிறப்பாக நடத்தி வருகிறது இவர்களுக்கு உறுதுணையாக இப்பகுதி இளைஞர்களும் பொதுமக்களும் விழா சிறக்க ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர்.
குறிப்பாக அண்ணா நகர் பகுதியில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவின் போது வருடம் வருடம் தொடர்ந்து மழை பொழிவதால் இப்பகுதி பொதுமக்கள் அம்மனை பயபக்தியுடன் வழிப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-P.பரமசிவம், வால்பாறை.