தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நில அளவை பிரிவில் சார ஆய்வாளராக பணிபுரிந்து வந்த செல்வ மாடசாமி என்பவர் இன்று ரூ.3000 லஞ்சம் வாங்கிய போது லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால் தலைமையிலான போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவர் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் அவரிடம் விளாத்திகுளம் பிர்கா நில அளவை பிரிவின் சார் ஆய்வாளர் செல்வ மாடசாமி ரூ.4000 லஞ்சம் கேட்டுள்ளார். இதுபற்றி சிவலிங்கம் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸிடம் அளித்த ரகசிய புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்பு வரை டிஎஸ்பி பீட்டர் பால் மற்றும் ஆய்வாளர் சுதா தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்பார்வையில் சிவலிங்கத்திடம் போலீசார் இரசாயனம் தடவிய ரூ.3000 பணத்தை கொடுக்க அறிவுறுத்தியதன் பேரில், இன்று மாலை 3 மணி அளவில் விளாத்திகுளம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் சூப் கடையில் வைத்து விளாத்திகுளம் நில அளவைப் பிரிவு சார் ஆய்வாளர் செல்வ மாடசாமி இரசாயனம் தடவிய ரூ.3000 நோட்டுக்களை பெற்றுக் கொண்டார். இதை அடுத்து உடனடியாக அங்கிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆய்வாளர் செல்வம் மாடசாமி கையும் களவுமாக கைது செய்து விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் செய்தியாளர்
-ந.பூங்கோதை.