டிராக்டர் மூலம் கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்வதை அரசு அதிகாரிகள் தடுத்து நிறுத்த வேண்டும் என டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
கோவை மாவட்டம் ஆட்சியரிடம் கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் டிராக்டர்கள் மூலம் கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்வதை தடுக்க வேண்டும் என்று புகார் மனு ஒன்றை அளித்தனர்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அச்சங்கத்தின் தலைவர் அருண், கோவை மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட டிப்பர் கட்டுமான பொருட்கள் விநியோகம் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வாகனத்திற்கு சாலை வரி,பசுமை வரி மற்றும் தகுதி சான்று பெற்று முறையாக வாகனங்களை இயக்கி வருவதாக கூறினார்.மேலும் டிராக்டர் மற்றும் ட்ரெய்லர் வாகனங்கள் மூலமாக ஆவணங்கள் இல்லாமல் முறைகேடாக கட்டுமான பொருட்களை விநியோகம் செய்து வருகின்றனர்.பிற மாவட்டங்களில் இருந்து ஜேசிபி இயந்திரங்களை எந்த ஒரு வரியும் வருடக் கணக்கில் செலுத்தாமல் இயக்கிக் கொண்டிருக்கின்றனர்.
இதனால் முறையாக அனைத்து வரியில் செலுத்தி லாரிகள் இயக்கிக் கொண்டிருக்கும் டிப்பர் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.டிராக்டர் மற்றும் ட்ரெய்லர் வாகனம் மூலமாக விபத்து ஏற்பட்டால் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும் அதற்கு உரிய இழப்பீடு வழங்க முடியாத சூழல் உள்ளது.அதனை ஏற்காமல் விதிமுறைகள் மீறி செயல்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
இதற்கு போக்குவரத்து துறை அதிகாரிகள்,போக்குவரத்து காவல்துறை மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.