வ.உ.சி மைதானத்தில் மே இரண்டாவது வாரத்தில் அரசுப் பொருட்காட்சி தொடங்கப்படவுள்ளது- மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்…!!!

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், வ.உ.சி மைதானத்தில் மக்களவை பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்குட்பட்டு, அரசுப் பொருட்காட்சி நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து அரசு துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், கோவை மாவட்டத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் ஆண்டுதோறும் அரசுப்பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு அரசுப் பொருட்காட்சியானது கோயம்புத்தூர் மாநகராட்சி, வ.உசி மைதானத்தில் மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கப்பட்டு, 45நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

இப்பொருட்காட்சியில் வருவாய் துறை. சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, வனத்துறை வேளாண்மைத்துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, கூட்டுறவுத் துறை, தோட்டக்கலைத்துறை, பொதுப் பணித் துறை, இந்து சமய அறநிலையத் துறை, பள்ளிக்கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கைத்தறி மற்றும் கதர் கிராமத் தொழில் துறை நெடுஞ்சாலைத் துறை,

சுற்றுலாத்துறை. போக்குவரத்துத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, செய்தி மக்கள் தொடர்புத்துறை தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மீன் வளத்துறை ஆகிய அமைக்கப்படவுள்ளன. அரசு துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட உள்ளது.

மேலும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், கோயம்புத்தூர்
மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கோ-ஆப்டெக்ஸ். ஆவின், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஆகிய அரசு சார்பு நிறுவனங்களும் இப்பொருட்காட்சியில் கண்காட்சி அரங்குகளை அமைக்கப்படவுள்ளன. மேலும், இந்த அரசு பொருட்காட்சி அரசு துறைகளின் அரங்குகள் மட்டுமின்றி கோடை காலத்தை பொதுமக்கள் பயனுள்ளதாக கழிக்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சத்துடன் கூடிய பல்வேறு விளையாட்டு சாதனங்களும், வீட்டு உபயோகப் பொருட்களுடன் கூடிய பல்வேறு விற்பனை
அரங்குகளும் அமைக்கப்படவுள்ளது.

இப்பொருட்காட்சியானது தினசரி மாலை 4மணி முதல் இரவு 10மணி வரை நடைபெறவுள்ளது. மக்களவை பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்குட்பட்டு, தங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் சிறப்பான முறையில் அரங்குகளை அமைக்க வேண்டும் என தெரிவித்தார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடி வருகை தந்தை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்சாக வரவேற்பு அளித்தனர்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp