தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 26ம் தேதி தொடங்கி ஏப்ரல் எட்டாம் தேதி வரை தமிழ் ,ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் போன்ற பாடங்களுக்கு நடைபெற்று முடிந்தது.
இந்த பொதுத் தேர்வு விடைத்தாள்கள் திருத்தப்பட்டு நாளை பொதுத்தேர்வு முடிவுகள் மே பத்தாம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால் வெளியிடப்பட்ட செய்தி, மே 6 – ம் தேதி பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் நாளை பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு தேர்ச்சியை போன்று பத்தாம் வகுப்பு பொது தேர்வு தேர்ச்சி அதிகபட்ச விழுக்காடுகளை பெறுமென மாணவ மாணவிகளால் எதிர்பார்க்கப்படுகிறது. https://www.dge.tn.nic.in மற்றும் https://tnresults.nic.in என்ற இணைய வழி மூலமாக காலை 9:30 மணியளவில் காண முடியும்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணாறு.