கோவை மாவட்டம் ஆத்துப்பாலம் சுண்ணாம்பு கால்வாய் நொய்யல் ஆற்றில் ரசாயனம் கலந்ததால் தண்ணீர் முழுவதும் நுரையாக மாறி காட்சியளிக்கிறது. இது போன்ற அபாயத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பதோடு ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இதனை தடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே கவனத்தில் எடுத்துக் கொண்டு இது போன்ற சாயக் கழிவுகள் மற்றும் ரசாயனங்களை கலப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-தலைமை நிருபர்.