இளம் வயது மியூசிக் கம்போஸர் – சாய் திவி நந்தன்…!

சாதனை சிறுவர், சிறுமிகள் தொடர் – 3                                                                                                                  பதினான்கு வயதிலேயே மியூசிக் கம்போசிங் செய்து அசத்தி வருகிறார், சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த சாய் திவி நந்தன். இவர் 3 வயதிலேயே இசையின் மீது அதீத ஆர்வம் கொண்டு டிரம்ஸ் வாசிக்க கற்றுக் கொண்டவர். பிஞ்சு வயதிலேயே இவரது இசை ஆர்வத்தினை கண்ட இவரின் பெற்றோர்கள் இசைத்துறையில் இவரை பல்வேறு நுட்பங்களை கற்றுக்கொள்ள அனுப்பினர்.

இவர் கடந்த நான்கு ஆண்டுகளாக கீ போர்ட்டும் கற்று வருகிறார். இவருக்கு நன்றாக கிடார் வாசிக்கவும், கஜோன் வாசிக்கவும் தெரியும். ” இசை தான் எனது எதிர்காலம்” என்று முழு மூச்சுடன் பல்வேறு மேடை நிகழ்ச்சிகளையும் இசைக்குழுவினருடன் சேர்ந்து திறம்பட செய்து வருகிறார். சென்னை தீவுத்திடலில் சுற்றுலா துறை ஏற்பாடு செய்திருந்த கலை நிகழ்ச்சியில் இவரது CJ troops குழுவினருடன் சேர்ந்து பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியில் இசையமைத்து பார்வையாளர்களை அசத்தியுள்ளார்.


இவரது தாய் திருமதி. விஜயலட்சுமி ஸ்ரீதர் அவர்கள் தான் இந்த நிகழ்ச்சியின் ஆர்கனைஸர். இவர்களது திஸா அகடமி குழுவினருடன் சேர்ந்து பல்வேறு மேடை நிகழ்ச்சிகளில் அசத்தி வருகிறார் சாய் திவி நந்தன். இவர் 9-வது வகுப்பு வரை வேலம்மாள் பள்ளியில் படித்தவர், இசையின் மீது கொண்ட அதீதமான ஆர்வத்தினால் 10-வது படிப்பினை ஹோம் ஸ்கூலிங் முறையில் படித்து வருகிறார். அதில் கிடைக்கும் மீதமான நேரத்தில் முழு நேர இசை பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

பள்ளியில் படிக்கும் போது நிறைய இன்டர் ஸ்கூல் காம்படிஷேனில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை தட்டி வந்துள்ளார் இந்த இளம் மியூசிக் கம்போஸர். இன்னும் நிறைய மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும். அதில் கிடைக்கும் பணத்தினை ஏழை குழந்தைகளின் இலவச கல்விக்கு அளிக்க வேண்டும் என்று பெரும் சமூக அக்கறையுடன் பேசுகிறார். இவர் எதிர்காலத்தில் ஏ .ஆர். ரஹ்மான் போன்று சிறந்த மியூசிக் டைரக்டராக வரவேண்டும் என்பது இவரது ஆகப் பெரும் ஆசை என்பதோடு மைக்கேல் ஜாக்சனை தனது ஆதர்ஸ மியூசிக் குருவாக நினைக்கிறார்.

இசைத்துறையில் பெரிதும் சாதிக்க நினைக்கும் இந்த இளம் இசையமைப்பாளர் இசைக்கென தனியாக பள்ளியை அமைத்து இலவசமாக பலருக்கும் இசை கற்று தரவேண்டும் என்பது இவரது லட்சியம் என்கிறார். இவரது தாயார் விஜயலட்சுமி பரத கலைஞர் மற்றும் கலைத்துறையை சேர்ந்தவர் தான். இவரது தந்தை ஸ்ரீதர் இன்ஜினியர். இவர்களின் திஸா அகாடமி மூலமாக ஏற்கனவே நிறைய சமூக சேவைகளை செய்து வருகிறார்கள்.


தமிழகமெங்கும் பெண்களின் பாதுக்காப்புக்கென தற்காப்பு கலையை இலவசமாக சொல்லி தருகிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு. சாய் திவி நந்தன் நோவா வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் 2022 யங் மியூசிக் கம்போஸர் விருதினை வென்றுள்ளார். அதே ஆண்டில் இந்தியன் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் வழங்கிய ஸ்டூடண்ட் டேலண்ட் விருதினை வென்றுள்ளார்.


ஸ்டார் பர்ஃபாமர் விருதினை 2023-ல் வென்றுள்ளார். சிறந்த மியூசிக் பேண்ட் விருதினையும் வென்றுள்ளார். திறமையில் நாளைய ஏ.ஆர் ரஹ்மான் , இசைஞானி இளையராஜா கலந்த கலவையான இளம் இசைக்கலைஞன் சாய் திவி நந்தன் நிச்சயம் சாதனை படைப்பார்…!

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

-ஆர்.கே விக்கிரம பூபதி

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts

கலையரங்கம் கட்டிடம் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் சுகாதார வளாக கட்டிடம் கட்டுவதற்கு மற்றும் பள்ளி கட்டிடம் பராமரிப்பதற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அடிக்கல் நாட்டினார்!!

Read More »
Follow by Email
Instagram
Telegram
WhatsApp