கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் இன்று காலை சுமார் 7:45 மணியளவில் நிர்மலா பள்ளி ஆசிரியை இரு சக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததும் லாரி மேல் ஏறியதால் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
குனியமுத்தூரில் பிரபலமான நிர்மலா மாதா பள்ளியில், ஆசிரியராக பணிபுரிந்து வரும் அனிதா என்ற ஆசிரியை, ரத்தினபுரியில் இருந்து காலை உக்கடம் சாலையில் வந்து கொண்டிருக்கும் பொழுது, இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்து லாரி மேலே ஏறி சம்பவ இடத்திலேயே அகால மரணம் அடைந்தார்.
உடனடியாக காவல்துறை வந்து மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நாளைய வரலாறு மற்றும் நிர்மல மாதா பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர் சார்பாக வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.
One Response
Very disappointed 😞 🙏 RIP…..