தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்துள்ள தாமரை குளம் பகுதியில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் “உங்களைத் தேடி, உங்கள் ஊரில் ” திட்டம் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.பல்வேறு அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர் .கீழ வடகரை ஊர் புற நூலகம் சார்பில் இம்முகாமில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மனுவில் கடந்த 2007 ஆம் ஆண்டு முதல் கீழவடகரை ஊர்புற நூலகம் நல்ல முறையில் இயங்கி வருகிறது என்றும், அவை தற்போது ஏ ஜி ஏ எம் டி கட்டிடத்தில் இயங்கி வருவதாகவும் ஊர் புற நூலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை வைத்ததை அடுத்து ஊராட்சி நிர்வாகம் சார்பில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நூலகம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் முறையாக இடம் அளவீடு செய்து அத்துமால் காட்டப்படாததால் நூலகம் கட்டுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. ஆகவே கீழவடகரை ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் நூலகம் கட்ட ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தினை அளந்து அளவீடு செய்து நூலக கட்டிடம் கட்ட ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டுமாய் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கீழ வடகரை நூலக வாசகர் வட்டம் தலைவர் மோகன், பொருளாளர் ஜெயராஜ், மணிபூசாரி, புரவலர் முருகன், இப்ராஹிம் பாட்ஷா, ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ரஞ்சித், தேனி.