ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சமீபத்தில் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், போட்டி நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில் கோவை துடியலூர் என்ஜிஜிஓ காலனியை சேர்ந்த தொழில் அதிபர் ரவிக்குமார்(31), கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று பார்த்து ரசிக்க ஆசைப்பட்டார். கடந்த மாதம் 18ம் தேதி நடைபெற்ற சென்னை – பெங்களூரு போட்டிக்கு டிக்கெட் வாங்க முயற்சி செய்து வந்தார். அப்போது திருப்பூரை சேர்ந்த ஜெபரூபன்(27) என்பவரின் அறிமுகம் கிடைத்தது. இவர் ரவிக்குமாரிடம் ரூ. 1. 50 லட்சம் கொடுத்தால் போட்டிக்கு டிக்கெட் ஏற்பாடு செய்து தருவதாக கூறினார். இதனை நம்பிய ரவிக்குமார் அவரிடம் ரூ. 1. 50 லட்சம் கொடுத்தார். ஆனால் ஜெபரூபன் ஐபிஎல் டிக்கெட் வாங்கி கொடுக்கவில்லை. பணத்தை ரவிக்குமார் திருப்பி கேட்டபோது ஜெபரூபன் பல்வேறு காரணங்களை கூறி காலம் கடத்தி வந்தார். இது குறித்து ரவிக்குமார் துடியலூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் ஜெபரூபன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக, கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.