கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணாறு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு சுமார் 25 வருடங்களாக சிறப்பாக செய்திகளை அளித்து கொண்டிருக்கும் கேரளா விஷன் மீடியா நெட் ஊடகங்கள் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று சிறப்பான மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கு விருது வழங்கும் விழாவை அடிமாலி கிராம பஞ்சாயத்து ஹாலில் வைத்து வெற்றிகரமாக நடத்தினர்.
இதெல்லாம் ஆனது கலை நிகழ்ச்சிகளோடு ஆரம்பிக்கப்பட்டது இதில் தேவிகுளம் எம் எல் ஏ வழக்குரைஞர் ஏ ராஜா தலைமை வகித்தார் மற்றும் மீடியா நெட் நிறுவனர் பி.எஸ் சிபி வரவேற்புரையாற்றினார். முன்னாள் அமைச்சரும் உடுமஞ்சோலை தாலுகாவின் எம்எல்ஏ விமான எம் எம் மணி அவர்கள் நிகழ்ச்சி உரையாற்றி ஊடகங்களின் பங்கு மிகவும் முக்கியம் என்பதை விளக்கி கூறினார்.
கேபிள் டிவி ஆபரேட்டர்அசோசியேசன் மாநிலத் தலைவர் பிரவீன் மோகன் மற்றும் மாநில செயலாளர் சுரேஷ் நியூஸ் மலையாளம் நிறுவனர் அபூபக்கர் நிகழ்ச்சியில் அடிமாலி பிளாக் பஞ்சாயத்து தலைவர் மீடியா நெட் சேர்மன் நாசர் போன்றவர்கள் காசோலைகளை வழங்கினர்.
அடிமாலி பிளாக் பஞ்சாயத்து தலைவர் சோமன் செல்லப்பன் , மீடியா நெட் டைரக்டர் சுபாஷ் மற்றும் பல தலைவர்களும் அனேக பிரபலங்களும் ஆயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.