கோவை பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் அருகே கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியின்போது மதில்சுவர் இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி. பேரூர் பேரூராட்சி சார்பாக கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்றது. அப்போது அங்கிருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் தேனியை சேர்ந்த வேல்முருகன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் வடக்கு வீதியில் இருந்து நொய்யல் வரை சுமார் 200 மீட்டர் தொலைவிற்கு கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பொக்லைன் மூலம் கால்வாய்க்காக தோண்டிய பள்ளத்தை மூடும் பணியில் ஈடுபட்ட போது அங்கிருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அப்பொழுது இடுபாடுகளுக்குள் சிக்கிய பணியாளர் வேல்முருகன் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார் இதுகுறித்து
பேரூர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.