கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டம் வால்பாறையில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு குடிநீருக்காக தோண்டப்பட்ட குழி பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது.
இந்தப் பகுதியில் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் முதியவர்கள் பெண்கள் குழந்தைகள் என அதிகளவில் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.
குடிநீருக்காக தோண்டப்பட்ட இந்த குழி பல நாட்களாக சரி செய்யவில்லை என்று வால்பாறை பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த பணியினை நிறைவு செய்து விபத்தை தடுக்கும் விதமாக மக்களுக்குப் பயன்படும் வகையில் சரி செய்து தர வேண்டும் என்று வால்பாறை பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
-திவ்யகுமார், வால்பாறை.