கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணார் அருகே உள்ள அடிமாலையிலிருந்து குமுளிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடந்த மாதம் மட்டும் 10க்கும் மேற்பட்ட நபர்கள் வாகன விபத்தில் சிக்கி பிறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அடிமாலி குமுளி தேசிய நெடுஞ்சாலை மிகவும் குறுகிய அமைப்பாக இருப்பதாலும் அதை விரிவுபடுத்த எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததாலும் விபத்துக்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.
மட்டுமல்லாது அப்பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதாலும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதாலும் வாகனங்கள் தொடர்ந்து போக்குவரத்தை ஏற்படுகின்றன இதில் விபத்துக்களை தவிர்க்க அரசு உடனடியாக தலையிட்டு சாலைகளை விரிவுபடுத்த வேண்டும்.
ஆங்காங்கே பதாகைகள் வைக்கப்பட வேண்டும் காவல்துறையினர் கண்காணிப்பு இருக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.