நிலத்தகராறில் பூக்கடைக்காரர் குத்திக்கொலை!! காவல்துறை விசாரணை!!!

கோவை கவுண்டம்பாளையம் ஸ்ரீதேவி நகர் 4வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (42). இவர் டவுன்ஹால் பகுதியில் பூக்கடை நடத்தி வந்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சீனிவாசன் தனது அக்கா கணவர் அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (55) என்பவரிடம் 3. 5 சென்ட் நில பத்திரத்தை வாங்கி அடகு வைத்து ஜவுளிக்கடை துவங்கினார்.

அதில் போதிய வருமானம் இல்லாததால் அதனை மூடிவிட்டார். அதன் பிறகு சீனிவாசன் பூக்கடை நடத்தி வந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவு வருமானம் இல்லாததால் அவரால் அக்காள் கணவரின் நில பத்திரத்தை மீட்க முடியவில்லை. இதுதொடர்பாக அடிக்கடி சீனிவாசனுக்கும், சண்முகத்துக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில், சண்முகம் நேற்று சீனிவாசன் வீட்டுக்கு சென்றார். சீனிவாசனிடம் தனது நில பத்திரத்தை உடனே மீட்டு தரும்படி கேட்டார். அப்போது வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த சண்முகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சீனிவாசனை சரமாரியாக குத்தினார். இடது பக்க மார்பில் கத்தி குத்து விழுந்ததில், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சீனிவாசன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கவுண்டம்பாளையம் போலீசார் சண்முகம் கொலை வழக்குப்பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Search

Recent Posts