விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் குடும்பத்தற்கு இழப்பீடு வழங்கியதை போன்று, மீனவர்கள் மரணம்,பட்டாசு விபத்தில் உயிரிழப்பவர்களுக்கும் அதிக இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என தமிழர் தேசம் கட்சியினர் கோவையில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பெருகிவரும் கள்ளச்சாராய விற்பனையயும், அதனைத் தொடர்ந்து வரும் உயிரிழப்புகளையும் தடுத்து நிறுத்த கோரியும், தேர்தல் வாக்குறுதிப்படி பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரியும்,கோவை வடக்கு மாவட்ட தமிழர் தேசம் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் நிறுவன தலைவர் கே.கே.செல்வகுமார் அறிவுறுத்தலின் பேரில் கோவை தெற்கு தலூகா அலுவலகம் முன்பாக நடைபெற்ற இதில்,மாவட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார்.இதில் சுமார் நூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கள்ளச்சாராய மரணங்களை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து கோசங்களை எழுப்பினர்.
இதில் பேசிய தகவல் தொழில் நுட்ப பிரிவின் மாநில துணை செயலாளர் கருப்புசாமி, கள்ளச்சாராயம் பருகி இறந்தவர்களுக்கு தமிழக அரசு பத்து இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கி உள்ளதை வரவேற்பதாக கூறிய அவர், ஆனால் இதே போன்று மீனவர்கள் மரணம், பட்டாசு விபத்தில் உயிரிழப்பவர்களுக்கும் அதிக இழப்பீடு வழங்க முன்வர வேண்டும் என கேட்டு கொண்டார்.
-சீனி, போத்தனூர்.