தேனி மாவட்டம். பெரியகுளம் பகுதியில் கடந்த சில தினங்களாகவே பிராய்லர் கோழி கறி விற்பானையாளர்களிடையே நிலவி வந்த கடும் போட்டியின் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் 1 கிலோ ரூபாய் 280, 260, என கோழிக்கறி விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பெரியகுளம் சுதந்திர வீதி பகுதியில் செயல்பட்டு வரும் கோழி கறிக்கடைகளில் 1 கிலோ ரூ220,200,180 என விலை நிர்ணயம் இல்லாமல் ஏற்ற ,இறக்கத்துடன் கோழிக்கறி விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கடை விற்பனையாளர்களிடையே நிலவி வரும் போட்டியால் பொதுமக்கள் பலரும் பிராய்லர் கோழி கறிகளை மலிவு விலையில் எடுத்துச்செல்கின்றனர். விலை வீழ்ச்சிக்கு காரணம் விற்பனையாளர்களிடையே நிலவி வந்த போட்டியா? அல்லது பறவை காய்ச்சல் போன்று கோழிகளுக்கு ஏதேனும் நோய் ஏற்பட்டுள்ளதா? என்று பலரும் வியப்பில் இருந்து வருகின்றனர்.https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
உணவு பாதுகாப்புத்துறை, மற்றும் சுகாதாரத் துறையினர் கோழிக்கறிகளின் தன்மையை உறுதி செய்திட வேண்டுமாய் பொதுமக்கள் கோரிக்கை வருகின்றனர். தொடர் விடுமுறை காலம் என்பதால் பொதுமக்கள் பலரும் கோழி இறைச்சிகளை விரும்பி எடுத்துச் செல்கின்றனர். பொதுமக்களின் நலன் காக்கும் வகையில் விலை வீழ்ச்சியின் உண்மைத் தன்மையை ஆராய்ந்திட மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டுமாய் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைக்கின்றனர். நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ரஞ்சித் தேனி.