தேனி மாவட்டம் பெரியகுளம் பவளம் தியேட்டர் அருகே உள்ள தனியார் மதுபான கூட்டத்தில் மதுபிரியர்களுக்கு தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர் புகார்கள் சென்றதை அடுத்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர், மாவட்ட கலால் அலுவலர்,மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்பொழுது மதுபிரியர்களுக்கு தரமற்ற உணவுப் பொருட்கள் விநியோகம் செய்து வந்தது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து பார் உரிமையாளர்களை எச்சரித்து தரமான உணவுப் பொருட்கள் வழங்கிட அறிவுறுத்தியும், தர மற்ற உணவுப் பொருட்கள் விநியோகம் செய்தமைக்காக அபராதம் விதித்தும் சென்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ரஞ்சித், தேனி.