கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணாறு பகுதியில் மிகவும் பிரபலமான காய்கறி சந்தை மூணார் டவுனில் அமைந்துள்ளது.
ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்தில் இருந்து இப்பொழுது வரை இயங்கி வரும் இந்த காய்கறி சந்தையானது ஆங்கிலேயர்கள் காலத்தில் உருவாக்கிய சட்டதிட்டங்களை பின்பற்றியே நடைபெற்று வந்தது. அதில் வாரங்களில் சில நாட்களில் சந்தைகள் செயல்பட தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்பொழுது பெருகிவரும் மக்கள் தொகை மற்றும் வாகன நெறிசல்கள் சந்தைகளில் மக்கள் சென்றுவர மிகவும் கடினமாக உள்ளதால் எனவே வாரங்களில் அனைத்து நாட்களிலும் சந்தையை திறக்க வேண்டும் என்று வியாபாரிகள் சங்கத்திலிருந்து கோரிக்கை வைத்தனர்.
தற்போது அனைத்து நாட்களிலும் செயல்படும் என வைத்த கோரிக்கையை நிறைவேற்றி உள்ளது கேரளா அரசு. எனவே இந்த வாரம் முதல் அனைத்து நாட்களிலும் மூணார் காய்கறி சந்தை இயங்கும் என மிக மகிழ்ச்சியுடன் சந்தையில் கடை வைத்து நடத்தும் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணாறு.