கோவை மாவட்டம் வால்பாறையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட திட்ட அலுவலர் தலைமையில் நடைபெற்றது.
முகாமில் வணிகர் சம்மேளனத்தின் மாநில துணைச் செயலாளர் பரமசிவம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார் வால்பாறையில் வணிகவரி அலுவலகம் செயல்பட்டு வந்தது தற்பொழுது பொள்ளாச்சிக்கு மாற்றப்பட்டதால் இப்பகுதியில் இருக்கும் வணிகர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர் வேதனைப்படுகின்றன 40 கொண்டை ஊசி வளைவு கடந்து சுமார் மூணு மணி நேரம் பயணம் செய்து நேரம் விரையமும், பணவரையமும் ஏற்படுகிறது.
இப்பகுதியில் இருக்கும் சிறு மட்டும் பெரும் வணிகர்கள் பயன்பெறும் வகையில் வால்பாறையிலே வணிகவரி அலுவலகம் செயல்படுத்த வேண்டும் என்று மனுவிலும் நேரடியாகவும் தெரிவித்துள்ளார். இதை உடனடியாக பரிசீலனை பண்ணி வணிகவரி அலுவலகம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கிறேன் என்று திட்ட அலுவலர் கூறினார். முகாமில் பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தலைமை நிருபர்,
-ஈசா.