தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளி தலைமையாசிரியரிடம் பள்ளியின் கட்டமைப்பு வசதிகள், பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்தும், மாணவர் சேர்க்கை குறைவிற்கான காரணம் குறித்தும் கேட்டறிந்தார்.
இதைத்தொடர்ந்து சத்துணவு கூட்டத்திற்கு சென்று அங்கிருந்த சத்துணவு அமைப்பாளர், சமையலரிடம் பள்ளியில் சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் எத்தனை பேர்?, போதுமான உணவுப் பொருட்கள் உள்ளனவா? என்பது குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் பள்ளி ஆசிரியர்களிடம் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் பாடமுறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், விளாத்திகுளம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன், துணை வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்ட என ஏராளமான அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நாளையவரலாறு செய்திகளுக்காக,
செய்தியாளர்,
-நா பூங்கோதை, விளாத்திகுளம்.