கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலாத்தலமான மூணார் பகுதிகளில் மருத்துவமனைகளுக்கு செல்லவும் திடீரென்று ஒருவர் மரணம் அடைந்து விட்டால் அவரை கொண்டு செல்வதற்கான மற்றும் பாதுகாப்பதற்கான குளிர் சாதன பெட்டிகள் கொண்டு வரவும் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் மூன்று மணி நேரம் பயணம் செய்து 50 முதல் 60 கிலோ மீட்டர் தாண்டி இதனை ஏற்பாடு செய்ய வேண்டிய நிலை இருந்தது.
தற்போது மூணாறு டூரிஸ்ட் நிட் கைட் அசோசியேசன் நடத்தி வரும் இளைஞர்கள் ஒன்று சேர்ந்து சுமார் 1000 பேருக்கு மேலாக இதற்காக உழைத்து பொதுமக்களிடமும் வரும் சுற்றுலா பயநிகளிடமும் பண வசூல் செய்து இலவச ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியுள்ளனர்.
இவை அனைத்தும் வருங்கால சந்ததியினருக்கு பாராட்டுக்குரியதாக இருந்தாலும் தற்பொழுது இதை இயக்க கூடாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தடை செய்ய கோரி அன்னிய சக்திகள் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது இரண்டு தினங்களுக்கு முன்பு பிரீசர் பாக்ஸ் வைக்க இடம் கொடுக்கப்படவில்லை என்றும் பஞ்சாயத்து சார்பில் எந்த அனுமதியும் கொடுக்கப்படவில்லை என்றும் காவல்துறையினர் அலுவலகத்தில் வந்து அனைத்தையும் உடைத்து வாகனங்களை கைப்பற்றி சென்ற சம்வம் அனைவருக்கும் தெரிந்தது தற்போது இதனை தொடர்ந்து இயக்க இளைஞர்கள் போராடி வருகின்றனர்.
இதுவரையில் இங்கே ஆண்டு கொண்டிருக்கிற அரசியல் கட்சிகளும் அங்கே நிர்வகித்து கொண்டிருக்கிற நிர்வாகங்களும் செய்யாத ஒரு மிகப்பெரிய செயலை செய்து வரும் இளைஞர்களுக்கு தற்போது வந்துள்ள ஒரு இக்கட்டான சூழ்நிலை மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக அசோசியேஷன் உள்ள இளைஞர்கள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். அவர்கள் குறிப்பிட்டதாவது நாங்கள் மக்களுக்காக சேவை செய்ய தயாராக இருக்கிறோம் மக்கள் எங்களுக்கு இந்த சூழ்நிலையில் எங்களுக்காக வந்து எங்களோடு கைகோர்த்து நிற்க வேண்டிக் கொள்கிறோம் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதனை உடனடியாக அரசு தன் பக்கம் திசை திருப்பி இவ்வாறு சேவை மனப்பான்மையுடன் செயல்படும் இளைஞர்களை பாராட்டவும் அவளுடைய சேவை தொடர்ந்து செய்யவும் வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணாறு.
One Response
உதவ முன் வரவில்லை யென்றாலும் உப துரோகம் செய்ய வேண்டாம்.